திருச்சி மாநகரம் மாவட்டம் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறையினரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி சரக்கு டிஐஜி சரவணன் சுந்தர் திருச்சி மாநகர ஆணையர் சத்திய பிரியா, காவல்துறை கண்காணிப்பாளர் திருச்சி சுஜித் குமார், கரூர் சுந்தரவதனம், புதுக்கோட்டை வந்திதா பாண்டே, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில், 567 மனுக்களை குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் சமர்பித்தனர். குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் இருந்த மனுக்கள் மீதான சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம், உடனுக்குடன் கிடைத்ததை அடுத்து, மகிழ்ச்சியடைந்த சிலர், ஏடிஜிபியிடம் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.