திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ப. ரத்தினவேல் (20). ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரை, அண்மையில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடையதும், அவர் மீது 6 வழக்குகள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் இதனையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, அரியமங்கலம் போலீசார் பரிந்துரைத்தனர். பரிந்துரையை ஏற்ற மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, ரத்தினவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.