திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தா.பேட்டை பாவடி தெருவில் மங்கள விநாயகர் கோவில் புதிதாக கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் , வேதபாராயணம்| யாக வேள்வி, கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து விநாயக பெருமானுக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.