திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் யிடம் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 45 மற்றும் 46 ஆகிய வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் கொடிமரம் பின்பகுதியில் உள்ள வடிகால் வாரி மாவடிகுளம் வரை மற்றும் அந்தோணியார் கோவில் பின்புறம் உள்ள வடிகால் வாரி பாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் சென்னையை போல் மழை காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகனங்களும் அந்த பகுதியில் செல்ல முடியாத இடையூறு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்