அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வெங்கடேசபுரம் சாலையில் உள்ள கிணறு ஒன்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார் கிணற்று நீரில் ஆழம் அதிகமாக இருப்பது தெரியாமல் கிணற்றில் இறங்கிய அரவிந்தசாமி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் அரவிந்தசாமியின் உடலை மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்தினர் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
