திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வந்திருந்தது. இந்நிலையில் லால்குடி அருகே வழுதியூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருடைய மாடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்துள்ளது. வாடிவாசலில் அவிழ்த்து விட்ட காளை ஓடிச் சென்றது.பின்னர் அப்பகுதியில் உள்ள சுமார் 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி, யாக்காவோ திராவிடன், வீரர்கள் ராஜ்மோகன், பிரகாஷ், ராபர்ட் கென்னடி, தரணிதரன் உள்ளிட்டோர் கடும் போராட்டத்திற்கு பின் கிரேன் உதவியுடன் ஜல்லிக்கட்டு காளையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு காளையை உரிமையாளர் வசம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.