Skip to content
Home » திருச்சி ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

திருச்சி ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த கீழக்குறிச்சி ஊராட்சி, நத்தமாடிப்பட்டி கிராமத்தில் புள்ள பொதுக்குளத்தில் மீன் பிடிப்பதற்காக ஏற்பட்ட தகராறில், மக்கள் உரிமை கூட்டணி கட்சியில் உள்ள ஜோசப் என்பவர், பணம் கொடுத்தால் தான் மீன்பிடிக்க விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் காவல் ஆய்வாளரை மிரட்டி ஊர் முக்கியஸ்தர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

செய்துள்ளதாகவும், ஊர் மக்களிடம் விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்ததுடன் வீடுகளில் புகுந்து பெண் காவலர் இன்றி போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாகவும் இதனால் கிராம மக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் இது போன்ற செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தினையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கேகே நகர் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் ஐஜி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *