திருச்சியில் புதிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் தனியார் ஒருவர் பழைய வீட்டை வாங்கி, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடம் கட்டி வந்தார். மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இக்கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி
கமிஷனர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் குமரேசன், உதவி கமிஷனர் ரவி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் உள்ளிட்டோர் சேர்ந்த குழுவினர் அந்த கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.