திருச்சி குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலன். (60). இவர் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த முகமது முபாரக் (32), பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (38) ஆகிய மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி பாலனிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக அவர் பாலக்கரை போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். கைதான மூன்று பேரும் பிரபல ரவுடிகள் என்பதும், முகமது முபாரக் மீது பதினாறு வழக்குகளும், மணிகண்டன் மீது 20 வழக்குகளும், இளையராஜா மீது பத்து வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோன்று காந்தி மார்க்கெட்டில் காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவரிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருச்சி எடத்தெரு ரோடு மதுரை வீரன் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (50) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரும் பிரபல ரவுடி ஆவார் .இவர் மீதும் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது மட்டுமல்லாமல் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிபன் கடை உரிமையாளர் காமராஜரிடம் கத்தி முறையில் பணம் பறித்த திருச்சி தேவதானம் குருசாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (30) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ரவுடியான இவர் மீதும் 7 வழக்குகள் உள்ளன.