திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ச. நந்தகுமார் (23) என்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 1, 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடமிருந்த ரூ 13 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
