திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் (47) என்ற நபர், அப்பகுதியில் நின்று கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 3.400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக எடமலைப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
