திருச்சி , லால்குடி புதிய பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட லால்குடியைச் சேர்ந்த மைதீன் பாச்சா வயது 49 என்பவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1100 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.