திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருச்சி புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த கோபிநாத் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.இதேபோன்று திருவரங்கம் மூலத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சந்துரு (வயது 23)என்ற வாலிபரை திருவரங்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.