திருச்சி, புள்ளம்பாடி அருகே சிலுவைப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவைல அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒருவர் காய்ச்சி கொண்டு இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சிலுவைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த எட்வின் செல்வகுமார்(42). இவர் தனது சொந்தத் தோட்டத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம், பேரல், ஐ. டி. அரக் மற்றும் அடுப்புகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.