முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மதுரையில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல கோவையிலும் அமைக்கப்படும் என முதல்வர் அறி்வித்திருந்தார். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். கோவையில் கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.
