திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞன் இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் மான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருச்சிக்கு வருகை தந்தார் இந்த நிலையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ கேஎன் சேகரன், தெற்கு மாநகர செயலாளர் மதியவாணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.