திருச்சி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய திருவிழா சென் ஜேம்ஸ் பள்ளியில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.
கலை இலக்கிய விழா குறித்து கவிஞர் நந்தலாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறும்போது… கலை இலக்கியத் திருவிழாவானது திருச்சி செயின் ஜேம்ஸ் பள்ளியை திறந்தவெளி அரங்கத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகத்திலேயே வள்ளலாருக்கும், வைக்கம் வீரரான பெரியாருக்கும் ஒரே இடத்தில் மிகப்பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது கிடையாது. வரலாற்றில் முதல்முறையாக நாளை மறுநாள் (19ம் தேதி) மாலை திருச்சியில் “வள்ளலார் 200- வைக்கம் 100” என்ற தலைப்பில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில், கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட நடிகை ரோகினி, திரைப்பட இயக்குனர்கள் கௌதமராஜ், தமிழ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வில், செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஜோடியின் நாட்டுப்புற மக்கள் இசை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது என கூறினார்.