திருச்சி மாநகர் புத்தூர் 4 ரோடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை ஒட்டி வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கடையின் பூட்டை உடைத்து இரண்டு பேர் திருட முயன்றுள்ளனர். ஆனால் பொருள் எதுவும் திருடு போகவில்லை. இதுகுறித்து சக்திவேல் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் . புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்கு பதிந்து, மன்சூர் அலிகான் என்ற வாலிபரை கைது செய்தனர் தப்பி ஓடிய குமரேசனை தேடி வருகின்றனர்.
