பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் உலக கண் பார்வை தினம் கொண்டாடப்படுகிறது. கண் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்றவற்றில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
ரோட்டரி கிளப் , ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த மனித சங்கிலியை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு துவக்கி வைத்தார் இதில் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்