திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற அறப்போர் இயக்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியது..
திருச்சி ஜெ ஜெ கல்லூரி 15 ஏக்கர் அரசு நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பத்திரப்பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள 15.04 ஏக்கர் அரசு நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்களை திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள ஜெ.ஜெ கல்லூரி ஆக்கிரமித்துள்ளதற்கான ஆதாரங்கள், பத்திரப்பதிவு செய்துள்ளதற்கான ஆதாரங்களையும் இன்று வரை அவை அரசு நிலங்களாக இருப்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளரிடம் நேற்றைய தினம் புகார் அளிக்கபட்டது.
திருச்சியின் நிலத்தடி நீர் அளவு கடந்த பல வருடங்களாக குறைந்து கொண்டே போகிறது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே இந்த நீர்நிலைகள் மீண்டும் மீட்டெடுக்கப்படுவது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய கடமையாகும். எனவே இன்றைய தேதியில் அரசு நிலமாக வருவாய் ஆவணங்களில் உள்ள இந்த நிலங்களை பத்திர பதிவு செய்தது மோசடியானது என்று அறிவித்து பத்திரபதிவு சட்ட பிரிவு 77 படி அவற்றை ரத்து செய்து அவற்றை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மீது பிரிவு 81 இன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் கோரியும். மேலும் திருச்சி ஆட்சியர் இந்த நீர் நிலைகளை தூர்வாரி இவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனார்.