நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது.
இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மனைவி சகாயராணி (வயது 70) இருந்து வந்தார்.
இந்த திருமண மண்டபத்தில் கடந்த ஏழாம் தேதி ஒரு விசேஷ நிகழ்ச்சி நடந்தது அதைத் தொடர்ந்து இரண்டு வாலிபர்கள் ரேடியோ செட் வேலைக்காக வந்திருந்தனர். அப்போது சகாய ராணியின் கழுத்தில் பளபளவென மின்னிய செயினை பார்த்து அது தங்க நகையாக இருக்கலாம் என கருதி கொள்ளையடிக்க திட்டமிட்டதால் பின்னர் நள்ளிரவு இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருந்த சகாயராணி அருகே சென்றனர் பின்னர் ஒருவன் அவரது கைகளை பிடித்து வாயை பொத்திக் கொள்ள இன்னொருவன் அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டான் .பின்னர் இருண்டு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர் .இது குறித்து சகாயராணி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சகாயராணி தான் அணிந்திருந்தது கவரிங் நகை என கூறியுள்ளார்.
தங்க தங்க நகை என நினைத்து மூதாட்டியின் வாயை பொத்தி கவரிங் செயினை கொள்ளையடித்துச் சென்று இரண்டு மர்ம நபர்களை போலீசார் வரை வீசி தேடி வருகின்றனர்.
நகை தொழிலாளியை கீழே தள்ளி நகை கொள்ளை….3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
திருச்சி தெற்கு சுண்ணாம்பு கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). இவர் அங்குள்ள ஒரு நகை கடையில்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பின்னர் ஒன்றரை பவுன் நகையை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு கொடுப்பதற்காக கள்ளர் தெரு வழியாக சென்றார். அப்போது மூன்று மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி விட்டனர். பின்னர் அந்த நகையை மூன்று மர்ம நபர்களும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.