Skip to content

ஜல்லிகட்டு வீரரின் நொறுங்கிய விலா எலும்பு….சரிசெய்த திருச்சி அப்பல்லோ…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 28வயது வாலிபர் காளைமுட்டி படுகாயம் அடைந்த நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். அவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங் என்ற நிலையில் இருப்பதை மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர். வலது நுரையீரலில் 8சென்டிமீட்டர் அளவு சிதைவு ஏற்பட்டிருந்தது. மேலும் மூச்சுக்காற்று கசிவு மற்றும் ரத்தக் கசிவு மேலும் விலா எலும்புகள் முறிந்த நிலையில் இருப்பதை கண்ட மருத்துவர் ஸ்டீபன் கண்டறிந்தார்.
தொடர்ந்து இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரவிந்த் கல்யாணசுந்தரம், ஸ்ரீகாந்த் பூர்ணிமா மயக்கவியல் நிபுணர்கள் ரோகினி சரவணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் விரைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்பேர் அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். இந்நிகழ்வில் பொது மேலாளர் சங்கீத் ராமமூர்த்தி| விற்பனை பிரிவு மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!