Skip to content
Home » திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 70 இடங்களில் கட்சி கொடி மற்றும் எஐடியுசி தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்தார். ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் க. சுரேஷ் மே தின உரையாற்றினார். பெரியமிளகு பாறை கட்சி கிளை கொடியினை ஈஸ்வரி தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை.சிவ சூரியன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். செல்வகுமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெயலானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேற்கு பகுதி குழுவின் சார்பில் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி தலைமையில் 18 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைச் செயலாளர் க.முருகன், பொருளாளர் ரவீந்திரன், இளைஞர் பெருமன்ற பகுதி செயலாளர் தர்மராஜ், சரண் சிங், ஆனந்தன், க.ஆயிஷா, வை.புஷ்பம், ராஜேஸ்வரி, ராமச்சந்திரன், என்.எஸ். பாட்ஷா, துரைராஜ், நாகராஜ், சந்திர பிரகாஷ், மௌலானா, ஜான் பாஷா, மாணிக்கம், மீனாட்சி சுந்தரம், சுமதி, சந்திரசேகர், கங்காதேவி, சுலோச்சனா, அப்துல் மஜீத், சசிவர்ணம் மற்றும் திமுகவின் உறையூர் பகுதி பொருளாளர் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா.முத்துக்குமார் அகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்குப் பகுதிக்கு சார்பில் பகுதி செயலாளர் சையது அபுதாகிர் தலைமையில் ஐந்து இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் அன்சர்தீன், ஜி.ஆர். தினேஷ்குமார், கே.கே. முருகேசன், ஜெயக்குமார், அருண், தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் பகுதி செயலாளர் பார்வதி தலைமையில் மூன்று இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் கருணாகரன், லாவண்யா, பூபதி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் எம். ஆர்.எஸ். ராஜலிங்கம் தலைமையில் ஐந்து இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் நடராஜன், வீரமுத்து, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணிகண்டன் ஒன்றியத்தில் எம்.ஆர். முருகன் தலைமையில் 12 இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் முத்தழகு, மருதம்மால், ஜெகநாதன், மேகராஜ், விஸ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேகபுரம் பகுதி குழுவின் சார்பில் பகுதி செயலாளர் அஞ்சுகம் தலைமையில் ஐந்து இடங்களில்

கொடியேற்றப்பட்டது. இதில் அசோக், முருகேசன், பிரான்ஸிஸ், நல்லு, ஜி ஆர் சரவணன், மகேந்திரன், ரோசேரியா, நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்மலை பகுதி குழு சார்பில் பகுதி செயலாளர் ராஜா தலைமையில் நான்கு இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் ஜான்பால், பொன்னுதுரை, பால் கிறிஸ்டி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கல்யாண சுந்தர மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கல்யாணசுந்தரம் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் காரணமாக மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *