திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில் இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றிவைத்து கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சியில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000 , ரூ.5,000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்லூரி கட்டணமாக 17 நபர்களுக்கு சிறப்பு தொகை தலா ரூபாய் 20,000 ரொக்கம் தொகை வழங்கினார்.
தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக 2023 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு முதலமைச்சர் விருது மற்றும் முதல் பரிசுத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மேயர் மு. அன்பழகனிடம் வழங்கினார். அந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட்டில் வரக்கூடிய வட்டி தொகையை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்லூரி கல்லவியினை ஊக்குவிக்கும் விதமாக கல்வி கட்டணத்தை வழங்குவதாக மேயர் அறிவித்தார். அந்த தொகையில் இருந்து தான் இன்று கல்வி கட்டணம் 17 பேருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தைஅருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கும் மேயர் மாலை அணிவித்தார்.
இந்த விழாவில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் , துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், .மு.மதிவாணன், த.துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், பி.ஜெயநிர்மலா, துணை ஆணையர் கே.பாலு, நகர்நலஅலுவலர் த.மணிவண்ணன், செயற்பொறியாளர்கள் திரு.கே.எஸ்.பாலசுப்ரமணியன்,.மா.செல்வரரஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவிஆணையர்கள் உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.