திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து, மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வருண் குமாரும் உடனிருந்தார்.
அதைத்தொடர்ந்து தியாகிகளின் வாரிசுகளை கலெக்டர் பிரதீப் குமார் கவிரவித்து, அவர்களுக்கு சிறப்பு செய்தார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவிகள் மூவர்ணகொடி போல அமர்ந்து நடத்திய கலைநிகழ்ச்சிகள் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது. முன்னதாக காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் கலெக்டர் பிரதீப் குமார் மலர்ச்செண்டு வைத்து மரி்யாதை செலுத்தினார்.