திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குறைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வரின் குறை தீர்க்கும் கூட்டத்தில் மருத்துவத்துறை காவல்துறை தீயணைப்பு துறை நெடுஞ்சாலைத்துறை கால்நடைத்துறை விவசாயத்துறை உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் இந்த தமிழக முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும்
கூட்டம் இனாம் சமயபுரம் ஊராட்சியில் நடைபெற்றது அப்போது இந்த கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வந்த போது.
இந்த குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு இரண்டு பெரிய அண்டாவில் குஸ்கா காலை முதலே தயார் செய்து. நிகழ்வு முடிந்தும் முடியாமலும் பொதுமக்களுக்கு குஸ்கா சாப்பாடு கொடுப்பதாக கூறிய உடனே முந்தி அடித்துக்கொண்டு
குஸ்காவை வாங்கிக் கொண்டு கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு பின்பு உள்ள பூங்காவில் இனம் சமயபுரம் ஊராட்சி சார்பில் இலவசமாக பொதுமக்கள் குஸ்கா உணவை அருந்தி விட்டு சென்றனர். இனாம் சமயபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய அண்டாவில் குஸ்கா செய்து குறை தீர்க்கும் கூட்டத்தில் வந்த பொது மக்களின் கோரிக்கையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்து அனுப்பிய ஊராட்சி நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.