திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட இளை யோருக்கான தடகள போட்டிகள் அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, தலைமையில் நடந்தது.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500 -க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தொட்டியம் தடகள கிளப் அணி 2 தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் கோல்டன் தடகள கிளப் அணி 2 தங்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
12 வயதுக்குட்பட்டோருக் கான ஆண்கள் பிரிவில் கேம்பியன் பள்ளி (2 தங்கம்), பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. (2 தங்கம்) முதலிடத்தை பிடித்தன.
மேலும் 14வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண் கள் பிரிவில் கேம்பியன் பள்ளியும் (3
தங்கம்), பெண்கள் பிரிவில் கோல்டன் கிளப்பும் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி),
16வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் (5 தங்கம்), பெண்கள் பிரிவில் (3 தங்கம், 3 வெள்ளி) வெற்றி பெற்று கேம்பியன் பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த போட் டிகளின் முடிவில் 15 பேர் தேசிய போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய வருவாய்பணி கூடுதல் ஆணையர் திலீபன், பனானா லீப் மனோகரன், காடோலினியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர்,
திருமதி கோமதி சுப்ரமணியன், திருச்சி மாவட்ட தடகள சங்கம் துணைத் தலைவர், (ஒலிம்பியன்) P. சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க ஒருங்கிணையாளர் சுரேஷ் பாபு, கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.