திருச்சி புத்தூர் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வளாகத்தில் மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ரத்னா குளோபல் மருத்துவமனை ,அப்போலோ மருத்துவமனை, தீனா பல் மருத்துவமனை ,மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனை பலர் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் இலவச பரிசோதனை செய்யப்பட்டது . இந்த மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி அளவில் தொடங்கி மாலை 4 மணியுடன் முடிவடையும்.
பல்வேறு துறை சார்ந்த மருத்துவகள் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமில் பயன் அடைந்தனர். இம்மருத்துவ முகாமில் இலவசமாக கண் சிகிச்சை,நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ,பல்
நோய்கள் மற்றும் பிற நோய்கள் சம்பந்தமாக ஆலோசனை வழங்குவது அவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்துகளை வழங்குவது போன்ற பல்வேறு வியாதிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை சார்பில் இலவச ரத்த தானம் முகமும் நடைபெற்றது