Skip to content
Home » இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது மகள் சுகிர்தா காணவில்லை. இதுகுறித்து சுகிர்தாவின் தாய் கவிதா ராம்ஜி நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ராம்ஜி நகர் போலீசார்  காணாமல் போன சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தாராபுரம்: தண்ணீர் தொட்டியில் குளித்தவர் சாவு!

கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு…. திருச்சி, சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையூர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். (50). இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார் காமராஜ். இதில் காயமடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த காமராஜன் மகன் அஜித் அளித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற நபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை. ஒருவர் கைது…. திருச்சி, சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு பாலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் கொடியாலம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் அவரிடம் இருந்து 700 ரூபாய் பணம் மற்றும் லாட்டரி எண்கள் குறித்து வைக்க பயன்படுத்தப்பட்ட துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருச்சி , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் தனது குழுவினருடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கீழக்கண்ணு குளம் பெட்டிக்கடையில் அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி(48) என்பவரும் ,வையம்பட்டியில் கருங்குளம் ரோடு பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த சம்சுதீன் வயது 35 என்பவரும் பளுவஞ்சி பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(60) என்பவரும் அரசு மதுபானங்களை பதுக்கி  வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இதைனையடுத்து  போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பேரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!