திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீதேவி மங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (38).
தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனகா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து கனகா 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பழனிச்சாமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் கடுமையான வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் விஷம் குடித்து மயங்கி சரிந்தார். தாயார் சுபைதா மகனை மீட்டு பாடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்த தகவல் அறிந்த கனகா மருத்துவமனைக்கு ஓடோடி சென்றார். பின்னர் கணவர் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.