Skip to content
Home » திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

  • by Authour

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார்.

அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இவர்கள் சொந்தமாக 6 கிரசர்கள், ரெடிமிக்ஸ் இயந்திர வாகனங்களும், தனியார் பேருந்துகளும் , மேலும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதை அறிந்த கொள்ளையர்கள் நேதாஜி வீட்டிற்குள் நுழைந்து சென்சார் கதவை உடைத்து வீட்டில் இருந்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டில் சென்சார் லைட் எரிவது நேதாஜியின் மகள் செல்போனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் உடனடியாக வீட்டிற்கு ஆளை அனுப்பி பார்த்துள்ளனர்.

அப்பொழுது வீட்டின் சென்சார்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் இருந்த 300 பவுன் நகை திருட்டுப் போய் உள்ளது தெரியவந்தது.

உடனடியாக இச் சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக கைரேகை பிரிவு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் அச்சுதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது அது குற்றவாளிகளை மோப்பம் பிடித்து திருவெறும்பூர் கல்லணை சாலையில் ஓடியது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *