கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வெள்ளமடம் கிறிஸ்து நகர் மரியா நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜான் பால் ( 57). சுற்றுலா வழிகாட்டி. இவர் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களை திருச்சி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார் .இங்கு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சொகுசு ஹோட்டலில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இதில் சுற்றுலா வழிகாட்டி அலெக்ஸ் ஜான் பான் ஒரு அறையிலும், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த மற்றவர்கள் இரண்டு அறைகளிலும் தங்கி இருந்தனர் .நேற்று திருவரங்கம் கோவிலுக்கு சென்று விட்டு அறைக்கு வந்தனர் .பின்னர் நெதர்லாந்து நாட்டினர் சுற்றுலா வழிகாட்டி அலெக்ஸ் ஜான்பாலை தொடர்பு கொண்டு உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. உடனே நெதர்லாந்து நாட்டினர் ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது அலெக்ஸ் ஜான் பால் அறையில் உள்ள படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். உடனே ஹோட்டல் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் கன்டோன்மென்ட் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் ஓட்டலில் சடலமாக கிடந்த சுற்றுலா வழிகாட்டி…விசாரணை….
- by Authour
