திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும்இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST)நிதியுதவியுடன்“பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள்” (FMRICGF-2024) என்ற தலைப்பில்இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நவம்பர்26 மற்றும் 27 தேதிகளில்நடத்தியது.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் ஆராய்ச்சித்
துறையில், தங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்வைக்க ஒரு தளத்தை வழங்குவதே மாநாட்டின் நோக்கமாக இருந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், வேதியியல்ஆராய்ச்சித்துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியை முனைவர். A. லீமா ரோஸ் வரவேற்றார்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பேராசிரியர்முனைவர்.S.மீனாட்சி தொடக்க உரை நிகழ்த்தினார். மாநாட்டின் சிறப்பம்சங்களை திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் டீன் முனைவர்K.சேதுராமன் விளக்கினார்.