திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச் இ பி எப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது.
அதில் சிஒன் பகுதியை சேர்ந்தவர் செழியன் (57). இவர் எச்இபிஎப் தொழிற்சாலையில் எம் சி எம் கிரேடில் வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் செழியனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது மேலும் செழியனுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மகன் சென்னையில் வேலை கிடைத்து சென்று விட்டார் சென்னையில் மகளும் தங்கி படித்து வருவதால் மனைவியும் அங்கே இருந்து வருகிறார். செழியன் மட்டுமே தனிமையில் வசித்து வந்தார்
குடிப்பழக்கத்திற்கு அடிமையான செழியன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயங்கி நிலையில் வீட்டின் அருகே கிடந்து இறந்து விட்டார்
அவரது வீட்டின் அருகே கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏற்கனவே எலிகள் அதிகமாக இருப்பதால் எலிகள்தான் செத்து இருக்கும் அதனால்தான் துர்நாற்றம் வீசுகிறது என அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்துசெழியன் குடியிருக்கும்
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து செழியனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் செழியன் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் பார்த்த பொழுது உள் பக்கம் தாளிடப்பட்டிருந்தது மேலும் வீட்டில் உள்ளேமற்றொரு கதவு தாளிடப்படாமல் இருந்துள்ளது அதன் வழியாக பார்த்த பொழுது செழியன் சேரில் அமர்ந்த வண்ணம் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் உடனடியாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான நவல்பட்டு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் செழியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் எச் இ பி எஃப் தொழிற்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது