மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திருச்சியில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கோலாலம்பூர் விமானம் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு தரையிறங்கிய அந்த விமானம் பின்னர் நள்ளிரவு திருச்சிக்கு வந்தது.