திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது (59) இவர் அரசங்குடி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
மனைவி சண்முகவள்ளி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருச்சியில் விடுதியில் தங்கி கல்லூரி பயின்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்பரனும் சண்முகவல்லியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு கேட்டை உடைத்து மர கதவையும் உடைத்து அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து ஒரு பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
சண்முகவல்லியும் அன்பரசனும் வழக்கம் போல் காலையில் தூங்கி எழுந்து பார்த்தபொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டின் அரையில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு பீரோவில் இருந்த பொருட்கள் கலைந்திருப்பது தெரிய வந்தது உடனடியாக இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் உடனடியாக இச்சம்பவம் குறித்து கைரேகை பிரிவு நிபுணர் மற்றும் மோப்ப நாய்க்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் வீட்டில் பீரோவில் இருந்து 9 பவுன் நகை மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.