ஓடிசா மாநிலம் குர்தா சாலை கோட்டத்தில் 3-வது ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி – ஹவுரா இடையே இயக்கப்படும் ரெயில்கள் பின்வரும் நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து பிற்பகல் 1:35 மணிக்கு ஹவுராவுக்கு புறப்படும் ரெயில் (எண் : 12664) வருகிற 18-ந்தேதி, 22-ந்தேதி, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் ஹவுராவில் இருந்து மாலை 5:40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில் (எண் : 12663) வருகிற 24-ந்தேதி, 27-ந்தேதி ஆகிய நாட்களில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.