திருச்சி பீமநகர், பக்காளி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது அனீஸ். இவருக்கும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சமீனா பானு (23) என்பவருக்கும் கடந்த 2020 நவம்பர் 29-ந் தேதி திருமணம் நடந்தது .முகமது அனீஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் திருமணத்தின்போது 50 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்க பணம் தருவதாக கூறியுள்ளனர். பின்னர் திருமணத்தின் போது 20 பவுன் நகை வீட்டு சீர்வரிசை பொருட்கள் ரூபாய் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை கொடுத்தனர் .பின்னர் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் மீதமுள்ள நகை பணத்தை தருவதாக உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் ஆன முதல் வாரத்தில் இருந்து சமீனா பானுவை அவரது கணவர் முகமது அனீஸ், மாமனார் முகமது ஹனி, மாமியார் ரஹ்மத் நிஷா மற்றும் உறவினர்கள் பிஸ்மில்லா பானு, பாத்திமா சல்மா ஆகியோர் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் முகமது அனிசை அவரது பெற்றோர்கள் 2021 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கர்ப்பமடைந்த சமீனா பானுவுக்கு பெண் குழந்தை பிறந்தது . ஆனால் கடந்த இரண்டு வருடம் ஆகியும் குழந்தையை தந்தை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சமீனா பானு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் முகமது அனீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.