திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தற்போது அரசு. அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (ஏ டபுள்யுஇ ஐஎல்)என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கி தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராஜேஷ் சௌத்ரி மற்றும் துப்பாக்கி தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீஷ் குமார் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை மூத்த
அதிகாரிகள் ஸ்ரீஅஜய் பட்டிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்ரீ அஜய் பட்டிடம் துப்பாக்கி தொழிற்சாலையின் தயாரிப்பு விவரம், வணிக விவரம், ஆர்டர் புத்தக நிலை, ஆர்&டி முயற்சிகள் பற்றி ஸ்ரீ அஜய் பட்டிற்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
மேலும் ஸ்ரீ அஜய் பட் உற்பத்தி நிலையங்களுக்குச் சென்று பல்வேறு வகையான ஆயுதங்களின் உற்பத்தியைப் பார்வையிட்டார். அப்போது திருச்சிதுப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள் (டிஏஆர்) துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தார். மேலும் துப்பாக்கி தொழிற்சாலை செய்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களைப் பாராட்டிய தோடு தான் அலுவலகம் வந்ததின் நினைவாக ஆளை வளாகத்திற்குள் மரக்கன்று ஒன்றை நடவு செய்தார்.