திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் இவரது மகன் பாலச்சந்தர் (45) இவர் மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகள் அவர் நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த பாலச்சந்தர் கடந்த 22ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூர் சென்றுள்ளார்,
ரேணுகா நேற்று காட்டூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர்கள் வீடு திறந்து கிடப்பதாக ரேணுகாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ரேணுகா வீட்டிற்கு வந்து பார்த்தப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறந்து பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி அழங்கோலமாக கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவல் நிலையத்திற்கு ரேணுகா தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது அது நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் ஓடி நின்றது.
மேலும் வீட்டிலிருந்து சுமார் 52 பவுன் நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.