Skip to content
Home » திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Authour

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். காவலர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.  இது குறித்து போலீசார்  விசாரிக்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *