Skip to content
Home » திருச்சி…. மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு… சிறுவர் உட்பட 2 பேர் கைது…

திருச்சி…. மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு… சிறுவர் உட்பட 2 பேர் கைது…

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம்.வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கற்பகம் மறுநாள் காலை கடையை திறக்க வந்தார்.அப்பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8,500 பணம் கேட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கற்பகம் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்
பாலக்கரை கோரிமேடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (24) மற்றும் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.