Skip to content

தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி மாவட்டம், சிறு௧மணியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மஞ்சுளா இவர்களுடைய மகள் கமலா தேவிதிருச் செந்துறை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் பிரபல கராத்தே ,டேக்வாண்டோ, யோகா, கிராண்ட் மாஸ்டர் டாக்டர் டிராகன் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று வருகிறார். யோகா சிலம்பத்தில் பரிசு பெற்றவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நடந்த தேசிய யோகாவில் சிறந்த ஆசனமான சிரசாசனத்தில் தலைகீழ் நின்று புதிய தேசிய சாதனை படைத்தார் இதனை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லீ புதிய உலக சாதனைக்காக சான்றிதழ், கோப்பை, வழங்கி பாராட்டினார். இவர் எம் எல் ஏ பழனியான்டி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் மேலும் அவர் ஊக்கத்தொகை வழங்கி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார்உலக சாதனையாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், உலக சாதனை படைத்த கமலாதேவியை பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.யோகாவில் பெண்கள் பிரிவில் தலைகீழ்நின்றார். மேலும் அஷ்ட வக்கிராசனம் கண்ட மிரண்ட ஆசனம் சக்கராசனம். தனுராசனம் ஒட்டக ஆசனம். உட்பட பல்வேறு சிறந்த ஆசனங்கள் செய்து இரண்டுபிரிவில் முதல் பரிசு பெற்றார்.

error: Content is protected !!