Skip to content

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிதாக ஆங்கிலம் பேச இலவச புத்தகம்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேச உதவக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் (Spoken English Books) பள்ளியால் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அவை ஒப்படைக்கப்பட்டன. ஆங்கில பேச்சுப்பயிற்சி புத்தகத்தின் முதல் பிரதியை திருப்பதி வெளியிட, திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி, அர்ஜூன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 200 மாணவர்களுக்கும்

ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமையாசிரியை அம்சவல்லி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் குழுமாயி, கார்த்திக், ஆசிரியர்கள் அனிதா ராணி, மீனாட்சி, சுசீலா, கிறிஸ்டினால் லூமி, டாரத்தி, கவிதா, ஸ்டெல்லா, முருகேஷ்வரி உட்பட திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பேபி டெல்பின் மேரி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!