திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பூலோகநாதர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன்( 39) பொற்கொல்லர் ஆன இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கோபால கிருஷ்ணன் பிள்ளை தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந் நிலையில் நேற்று மலைக்கோட்டை கோவிலுக்கு செல்வதாக கூறி தனசேகரன் வீட்டிலிருந்து புறப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே தனசேகரன் கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெரு பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது பற்றி தகவல் அறிந்த அவரது மனைவி ரம்யா காந்தி மார்க்கெட் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீஸ் எஸ்ஐ சோனியா காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.