உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 33 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் எஸ்தர் சாம்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சாதனை பெண் காவலர்கள் பெண் மருத்துவர்கள் பெண் பேராசிரியர்கள் பெண் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 33 பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.