திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் 26 வயதான காவேரி இவருக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் மட்டும் உள்ளார். இவரது தாய், தந்தை காலமாகிவிட்டனர். அதேபோல் லால்குடி அருகே நெடுஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து இவரது மகன் 26 வயதான காருண்யன்.இதில் காவேரியின் அண்ணன் ராஜேந்திரன் உறவினரான காருண்யன் சகோதரியை பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்து சென்ற காருண்யனுக்கும் காவிரிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் காருண்யன் அவரது அப்பா அங்கமுத்து அம்மா ரேணுகா அண்ணி கலைமதி அண்ணன்
குமரேசன் ஆகியோர் வரதட்சணை கேட்டு காவேரியை கொடுமைப்படுத்தி உள்ளனர். தாய், தந்தை இல்லாத காவேரி தன் அண்ணனிடம் கூறிய போது அவரது அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக சீர்வரிசை செய்வதாக கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியும் காருன்யனுக்கு அவரது குடும்பத்தினர் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை யடுத்து காவேரி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கணவர் காருண்யன் அவரது அப்பா அம்மா அண்ணன் அண்ணி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கணவர் காருண்யனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
