திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்தில் உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் மலையாளி. இவரது மகள் 20 வயதான சங்கவி். சங்கவிக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம் பெண் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவும் வயிற்று வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.