திருச்சி, லால்குடி அருகே உள்ள தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பத்மபிரியா (36), இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே மன வேதனையில் இருந்து வந்த பத்மபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் எஸ்ஐ திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.