திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. சிறுமியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வல்லரசு (வயது 35) என்பரை தேடிவருகின்றனர்.